Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை செப்டம்பர் 29, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை செப்டம்பர் 29, 2021

சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 13 ஆம் தேதி செப்டம்பர் 29,2021 புதன்கிழமை. அஷ்டமி திதி இரவு 08.30 மணி வரை அதன் பின் நவமி. திருவாதிரை இரவு 11.25 மணிவரை அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. புதன்பகவானின் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் ராசியில் பயணம் செய்கிறார். உங்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும் லாபம் பெருகும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் வீடு தேடி வருவதால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் வெற்றியைத் தேடித்தரும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். பிள்ளைகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். திடீர் பணவரவு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் நீங்கும். சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க சற்று சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.

மீனம் சந்திரன் இன்று சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உறவினர்கள் அக்கம் பக்கத்தினருடன் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. குடும்பத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விசயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் நன்மைகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.

0Shares

Leave a Reply