Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 28, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 28, 2021
சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 12 ஆம் தேதி செப்டம்பர் 28,2021 செவ்வாய்கிழமை. சப்தமி திதி மாலை 06.17 மணி வரை அதன் பின் அஷ்டமி. மிருகஷீரிடம் இரவு 08.44 மணிவரை அதன் பின் திருவாதிரை நட்சத்திரம். செவ்வாய் பகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணித்த சந்திரன் ராகுவிடம் இருந்து பிரிந்து உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்குச் செல்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்களால் உதவிகள் தேடி வரும். மனநிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் வீடு தேடி வருவதால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் வாங்க நல்ல நாளாகும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வண்டி வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். பேச்சில் நிதானம் தேவை. இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் சுப செய்திகள் தேடி வரும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று விலகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் ஏற்பட்ட தடை தாமதங்கள் நீங்கும். திடீர் வருமானம் வரும். வங்கி சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் தேடி வரும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க சற்று சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களின் உதவி வீடு தேடி வரும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.