Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021
சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 8 ஆம் தேதி செப்டம்பர் 24,2021 வெள்ளிக்கிழமை. திருதியைத் திதி காலை 08.30 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. அசுவினி காலை 08.54 மணிவரை அதன் பின் பரணி. சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம் சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டிற்கு உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வருமானம் அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.
ரிஷபம் சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகமாகக் கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
மிதுனம் சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.
கடகம் சந்திரன் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் வேலைபளு குறையும்.
சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் கடந்த இரண்டு நாட்களாக வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் நிம்மதி சந்தோஷமும் ஏற்படும்.
கன்னி
சந்திரன் எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செய்யும் தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் மனநிம்மதி குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை