டாக்டர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு வேளாண்மை திட்டம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை மூலம் டாக்டர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன்ரெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் துறை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன்,வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் விஜயகுமார், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் இரவி ஆகியோர் உடனிருந்தனர்