தேசிய மக்கள் நீதிமன்றம் பல வழக்குகள் தீர்வு காணப்பட்டது

Loading

கும்பகோணத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் பல வழக்குகள் தீர்வு காணப்பட்டது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேசிய சட்டப் பணிகள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் அவர்களின் ஆணைப்படி மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதியுமான திருமதி சுதா அவர்களின் அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அதில் முதல் அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ் தலைமையில், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி திருமதி. மும்தாஜ், கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்: 1-ன் நீதிபதி தரணிதர் மற்றும் இரண்டாவது அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி. சண்முகப்பிரியா தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபத.வெங்கடேசப்பெருமாள், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் மோகன்ராஜ் ஆகியோரது பங்கேற்பில் நடைபெற்றது.
அதேபோல் திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் திரு.கே.நிலவரசன் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அவர்கள் தலைமையில் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:2-ன் நீதிபதி பாண்டி மகாராஜா, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் திருமதி.லட்சுமி பங்கேற்பில் மொத்தம் 911-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 578-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் 3-காசோலை மோசடி வழக்கில் மூலம் ரூ. 4,21,924/-, 42-மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.1,26,59,693/-, 7- கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ. 17,02,260/- 3-ஜீவனாம்ச வழக்குகள் மூலம் ரூ.20,000/-, 1-தொழிலாளர் வழக்குகள் மூலம் ரூ.20,000/-, 121-குற்றவியல் வழக்குகள் மூலம் ரூ.1,17,600/-, 401-சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.2,23,600/- என மொத்தம் ரூ.1,51,65,077/- வசூல் ஆகியது.
இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *