Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 07, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 07, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 22 ஆம் தேதி செப்டம்பர் 07,2021 செவ்வாய்க்கிழமை. அமாவாசை காலை 06.21 மணி வரை அதன் பின் பிரதமை விடிகாலை 04.37 மணி வரை அதன் பின் துவிதியைத் திதி. பூரம் மாலை 05.05 மணி வரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம். செவ்வாய் பகவான் ஆதிக்கம் பெற்ற இன்றைய தினம் சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். செவ்வாய் 6ஆம் வீட்டில் பயணம் செய்வதால் கோபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். வெற்றிகரமான நாள். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். தன பாக்கியம் வந்து சேரும்.

ரிஷபம்
சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் முன்னேற்றகரமான நாள். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். திறமைகள் வெளிப்படும். இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். திடீர் மருத்துவ செலவுகள் வரும்.

மிதுனம்
உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. கடுமையாக பேசுவதை தவிர்த்து விடுங்கள். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தன வருமானம் கூடும். இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும்.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். புதிய பொருட்கள் வீடு தேடி வரும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கோபமான பேச்சுக்களை குறைக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உயரதிகாரிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்காக முயற்சி செய்யலாம். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புரமோசன் குறித்த நல்ல செய்தி தேடி வரும். நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.
தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். அலுவலகத்தில் வேலைபளு குறையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி தேடி வரும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக இருக்கும்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் நன்றாக இருக்கும். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடி வரும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமை குறைந்து லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேடி வரும் மனதில் நிம்மதியும் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *