தமிழகத்தில் “முதல் முறையாக ” ஓராண்டு பயிற்சிக்கு ஈரோடு எஸ்.பி., தேர்வு…!
ஈரோடு செப்டம்பர் 7
தமிழகத்தில் காவல்துறையில் முதல் முறையாக ஈரோட்டில் பணியாற்றும் கூடுதல் எஸ்.பி., ஓராண்டு பயிற்சிக்கு லண்டன் செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஈரோடு கூடுதல் எஸ்.பி., ஆக (நிர்வாகம்) பணியாற்றுபவர் பொன் கார்த்திக்குமார்( 36), 2009-10 இல் குரூப் 1 சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் நேரடி டி.எஸ்.பி.,யாக பணியில் அமர்த்தப்பட்டார் தற்போது ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி., ஆக பணியாற்றி வரும் இவர் லண்டனில் பாதுகாப்பு தீவிரவாத தடுப்பு மற்றும் கிளர்ச்சியை தடுப்பது குறித்து ஓராண்டு பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழக அரசு ஊழியர் ஒருவர் ஓராண்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும், ஓராண்டு கால பயிற்சியில் உணவு ,தங்குமிடம் ,விமான போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை லண்டன் அரசே ஏற்றுக்கொள்ளும், தமிழக அரசு மற்றும் இந்திய அரசினால் ஏற்கனவே பயிற்சி பெற இவருக்கு அனுமதி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது ,இதன் மூலம் லண்டனில் பெரும் பயிற்சியை இந்தியாவின் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு மற்றும் கிளர்ச்சியை தடுத்தல் குறித்து போலீஸ் அதிகாரிகள் கற்றுக்கொள்வது பயிற்சி பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது லண்டனில் பயிற்சிபெற உள்ள பொன் கார்த்திக் குமார் நேற்று முன்தினம் ஈரோட்டில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருடன் பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ,சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.