ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 17ம் மாத அமாவாசை அன்னதான விழா.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 17ம் மாத அமாவாசை அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார், மாநில துணைத்தலைவர் ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு, ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர். இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் டிரஸ்டின் கௌரவ தலைவர் முத்துவேல், மாநில மகளிர் அணி தலைவி கீதா சுந்தர், பைனான்சியர் தனஞ் ஜெயராஜ், சிட்டிபாபு மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெய்மாருதி சரவணன், கார்பெண்டர் இளங்கோவன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.