தமிழக காவல்துறைக்கு வந்த சோதனை: 8 மாதங்களில் 297 காவலர்கள் பலி

Loading

தமிழக காவல்துறைக்கு வந்த சோதனை: 8 மாதங்களில் 297 காவலர்கள் பலி… நடவடிக்கை எடுக்குமா அரசு..?

தமிழக காவல் துறையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 297 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காவல் துறையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 297 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக தமிழக காவல்துறையினர் ஆற்றிய பங்கு அளப்பறியது. முன்களப் பணியாளர்களாக வாகன சோதனைகள், ரோந்து பணிகள் என அயராமல் உழைத்தனர். முன்களப் பணியாளராக காவலர்கள் பணியாற்றியதால் பல காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் பல காவலர்கள் பலியாகினர். இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தல் பணிகள், பந்தபோஸ்து பணிகள் என தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறையில் வெவ்வேறு காரணங்களினால் கடந்த 8 மாதங்களில் மட்டும் 297 காவலர்கள் உயிரிழந்திருப்பதாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்த மே மாதத்தில் மட்டும் 83 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு 76 காவலர்களும், வாகன விபத்தில் சிக்கி 46 காவலர்களும், மாரடைப்பினால் 40 காவலர்களும், தற்கொலை செய்துகொண்டு 25 காவலர்களும், உடல் நலக்குறைவினால் 86 காவலர்களும், பாம்பு கடியில் 1 காவலரும், வீர மரணம் மற்றும் கொலை செய்யப்பட்டு 23 காவலர்களும் என மொத்தம் 297 காவலர்கள் கடந்த 8 மாதத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தமிழக காவல் துறையில் 337 காவலர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *