சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் இலவச பயணம்- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

Loading

சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திமுக தேர்தல் அறிக்கையான சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை பயன்பாட்டிற்கு இல்லாமல் எந்த ஒரு வாகனத்திற்கும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கபடாது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, ஈசிஆர் செல்லும் கலைஞர் கருணாநிதி சாலை ஆகிய பகுதியில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன.
இதனால் வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் என பலர் குறைந்தது மாதம் 2000 (இரண்டாயிரம் ரூபாயினை) சேமிக்க முடியும் எனவும் ஃபாஸ் டிராக் என்ற கட்டண முறை இருந்ததாலும் நீண்ட நெடு நேரம் காத்திருந்தே பெருங்குடி சுங்கச்சாவடியை கடக்க வேண்டிருந்ததாகவும் கூறினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு கால விரயம் அதிகம் ஏற்பட்டு வந்ததாகவும் அதில் இருந்து மீண்டது தங்களுக்கு மகிழ்ச அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துக் கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *