Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 20 , 2021
ஜோதிடம்
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 20 , 2021
சென்னை: பிலவ வருடம் ஆவணி 04 ஆம் தேதி ஆகஸ்ட் 20,2021 வெள்ளிக்கிழமை. திரயோதசி இரவு 08.50 மணி வரை அதன்பின் சதுர்த்தசி திதி. உத்திராடம் இரவு 09.24 மணி வரை அதன் பின் திருவோணம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். இன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
மேஷம் சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வங்கி சேமிப்பு உயரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
ரிஷபம் சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதால் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுத்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.வண்டி, வாகனங்கள் பராமரிப்பு செய்வதன் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது
மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வெளியிடங்களில் பேசும் போது நிதானம் தேவை. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெரிய அளவு முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி பகவானுடன் பயணம் செய்கிறார். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனியுடன் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்காக சுப செலவுகள் அதிகரிக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வங்கி கடன் கிடைக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசியில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வீர்கள். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டிற்கு உறவினர்கள் தேடி வருவார்கள்.