சிறுமி பாலியல் பலாத்காரம்

Loading

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 27). கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.

சமீபத்தில் குமார் அந்த சிறுமியை கூடலூரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் அங்குள்ள அறையில் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, குமாரை கைது செய்தனர்.

0Shares

Leave a Reply