புழல் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது.
![]()
சென்னை,
புழல் பகுதியில் வசிக்கும் 33 வயது பெண்மணியின்
7 வயது மகள் கடந்த 05.08.2021 அன்று இரவு 7.30 மணியளவில் அருகிலுள்ள
தனது பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர் வீட்டில்
வசிக்கும் துரை, வ/50, த/பெ.தேவதாஸ் என்பவர் மேற்படி சிறுமியிடம் ஆசை
வார்த்தை கூறி, தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
சிறுமி அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இது
குறித்து இராயபுரம் குழந்தைகள் நலவாரிய அலுவலர் W-33 மாதவரம்
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ
சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
W-33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி சிறுமிக்கு
பாலியல் தொந்தரவு கொடுத்த துரை, வ/50, த/பெ.தேவதாஸ், எண்.33/39,
திரு.வி.க.தெரு, காவாங்கரை, புழல், சென்னை என்பவரை கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட துரை நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
