ஒற்றுமையை வளர்க்கும் மீன்பிடித் திருவிழா .10 கிராம மக்கள் பங்கேற்பு.
![]()
திண்டுக்கல்,ஆக08
திண்டுக்கல் அடுத்த அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்டது பெருமாள் கோவில் பட்டி கிராமம். இந்த கிராமத்தில் மீன் பிடி திருவிழா வருடந்தோறும் நடத்தப்படுவது வழக்கம். சொந்த பந்தங்களை இணைக்கும் திருவிழாவாகவும், சுற்று வட்டார கிராமங்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் வகையிலும் இந்த மீன் பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மீன் பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் இப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் கொள்ளளவை எட்டியது. தண்ணீர் குறைந்ததும் இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது, குளக்கரையில் அமைந்துள்ள கன்னிமர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய பின்னர் ஊர் நாட்டண்மை வெள்ளை துண்டை வீசி மீன் திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது கரைகளில் வலைகளுடன் ஆர்வத்துடன் நின்றிருந்த சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளத்தில் இறங்கி மீன்களை வலை போட்டு உற்சாகமாக பிடித்தனர்,
இந்த திருவிழாவில்
நல்லாம்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, வாழைக்காய் பட்டி, கண்ணா பட்டி, வேடபட்டி உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்துகொண்டு, ஜிலேபி , கொறவை வகையான மீன்களை பிடித்தனர். மீன்பிடி திருவிழா இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது..

