அரசால் தடை செய்யப்பட்ட கலை பொருட்கள் பறிமுதல்….விற்பனை செய்த 3 பேர் கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கலை பொருட்கள் பறிமுதல்….விற்பனை செய்த 3 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட கலை பொருட்களான மான் கொம்பு , ஆமை ஓடு , யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் ,சந்தன மரத்தினால் ஆன சிலைகள், முள்ளம்பன்றி முட்களால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,
மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஜேம்ஸ் டவுன் பகுதியைச்சேர்ந்த சாம்ராஜ் (30) மற்றும் நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த ஆன்றோ போராஸ் (18), சங்கர் (30) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares

Leave a Reply