சம்பளம் தராததால் கண்ணீர் வடிக்கும் தூய்மைப் பணியாளர்கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

Loading

காளையார் கோவில் ஜூலை – 20

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சுற்றியுள்ள அரசு பள்ளியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு வருடத்துக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை

காளையார்கோவில் மற்றும் சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில்
அரசு தொடக்கப்பள்ளி – 93
அரசு நடுநிலைப்பள்ளி – 22 , அரசு உயர்நிலைப்பள்ளி – 5 மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி – 6 சராசரியாக மொத்த பள்ளியின் எண்ணிக்கை சுமார் 126 பள்ளிகள் இருந்து வருகின்றன இந்த பள்ளியில் தொடக்கப்பள்ளி என்றால் ஒரு தூய்மை பணியாளரும் மற்றும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என்றால் இரண்டு தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்

இதுகுறித்து தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறுகையில்:

கொரோன காலகட்டத்தில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படவில்லை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நிர்வாக வேலைக்காக ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் அறிவித்திருந்தது இந்தநிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு வருடத்திற்கு மேலாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது தூய்மைப் பணியாளர்களின் குடும்பம் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் பட்டு வருகின்றது எனவே உடனடியாக பள்ளியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர் அனைவருக்கும் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *