சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே எவ்வளவு தவறான கருத்துக்களைப் பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..

Loading

சேலம்.

சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே எவ்வளவு தவறான கருத்துக்களைப் பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி………

எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறுபவர் சசிகலா.திட்டமிட்டே பரப்பும் தவறான கருத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் கூறினார்………

மேகதாது அணை கட்டுவது மூலமாக டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்றும் பேசினார்……..

சேலம் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியது,

திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது.தற்போது அதற்கு மாறாக ஒரு குழு அமைக்கப்பட்டு விவரங்கள் பெற்று அதற்கு ஏற்றார்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.திமுக தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம்
என்று கூறிய நிலையில்,
இந்தாண்டு நீட் தேர்வு நடக்குமா?நடக்காதா? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கான பதில் வழங்காமல் மழுப்பி வந்தனர். நீட்தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு நடைமுறைப்படுத்தாமல் மக்களை திட்டமிட்டு ஏமாற்றி திமுக ஒரு பொய்யான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்தது.தண்ணீரை தேக்கவும்,தடுக்கவும் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேண்டுமென்றே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுப்பதற்காக மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணை கட்டுவது மூலமாக டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்
குறிப்பாக 16 மாவட்டங்கள் காவிரி ஆற்றை குடிநீர் ஆதாரமாக பாதிக்கபடும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில்
தடுப்பூசி சொல்லிக்கொள்ள பொதுமக்கள் அச்சப்பட்ட நிலையில் அன்றைய காலகட்டத்தில் எதிர்கட்சிகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்தினர்.
இருப்பினும் வரும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வந்தோம். ஒரு குப்பிக்கு 10 முதல் 20 தடுப்பூசிகள் வரை செலுத்தமுடியும்.அதில் ஆறு நபர்கள் வரும் பட்சத்தில் மீதமுள்ளவை மக்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் போனது. வேண்டுமென்றே தடுப்பூசிகளை வீணடிக்கப்படவில்லை என்றார்.

மூன்றாம் அலை வருவதற்கு முன்பாக விழிப்போடு இருந்து தடுப்பூசி செலுத்தவேண்டும் மத்திய அரசிடமிருந்து எவ்வளவு தடுப்பூசிகள் பெறப்பட்டது, எவ்வளவு மக்களுக்கு போடப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார்.

சசிகலாவுக்கும்,அதிமுகவுக்கும் எந்த தொடர்பில்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம். தெளிவுபடுத்திவிட்டோம்.
அதிமுவில் சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.

சசிகலா வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் எவ்வளவு தவறான கருத்துக்களைப் பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.ஏற்கனவே எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறுபவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறுகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான கருத்தை பரப்பி வருகிறார் இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *