தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் உயர்கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் ஜக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் உயர்கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் ஜக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
ஜாக்டோ ஜியோ வின் சார்பில் கடந்த ஆட்சிக்காலத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. அப்போது அதிமுக அரசு ஜாக்டோ ஜியோ அரசு ஊழிய ஆசிரியர் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழிய ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசு ஊழிய ஆசிரியர்கள் மீது 17பி,பணி மாறுதல், கைது செய்து சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டது.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியர்கள் மீது அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் மூலம் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டாய பணியிட மாறுதல் செய்யப்பட்டார்கள். பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போதே ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படுமென்று உறுதி அளித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்படும் அத்தனை பழிவாங்கும் நடவடிக்கைகளையும் கழக ஆட்சி மலர்ந்தவுடன் ரத்து செய்யப்படும் என்று அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். சொன்னது சொன்னபடி செய்யும் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் போராட்ட களத்தில் பழிவாங்கும் நடவடிக்கையில் பல நூறு கிலோமீட்டர் பணியிட மாற்றம் செய்த கல்லூரி பேராசிரியர்களின் மாறுதல்களை இரத்து செய்து மீண்டும் அவர்கள் பணிபுரிந்த கல்லூரிகளிலேயே பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து வரலாற்று சிறப்புமிக்க ஆணையை வழங்கி உள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் மற்றும் செய்தித்தொடர்பாளர் திரு கு.தியாகராஜன் அவர்கள் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் திரு க.பொன்முடி அவர்களை சந்தித்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் பாதுகாவலர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கும் இதற்காக பெருமுயற்சி எடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஜக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்தார் .இந்நிகழ்வில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், காந்திராஜன் மற்றும் அரசு கல்லூரி பேராசிரியர் சங்கத்தின் தலைவர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்