கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மூன்று கோடி ருபாய் செலவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம்… அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
![]()
தமிழக முதல்வராக மு.க . ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் ஆக்சிஜன் பயன்பாடும் அதிமாகி நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தவித்து வந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. மேலும் ஆக்சிஜன் தேவையை அறிந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு நிலையம் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க தமிழக அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மூன்று கோடி ருபாய் செலவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதன் பணிகளும் அதிவிரைவில் முடிக்கப்பட்டது . இந்த ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தால் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வரை உற்பத்தி செய்ய முடியும். புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மருத்துவ கல்லூரி முதல்வர் திருவாசகமணி, மாநகர செயலாளர் மகேஷ், இளைஞரணி மாவட்ட அமைப்பளார் சிவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்…

