Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஜூலை 13, 2021

Loading

Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஜூலை 13, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 29 ஆம் தேதி ஜூலை 13,2021 செவ்வாய்கிழமை. திருதியைத் திதி காலை 08.24 மணிவரை அதன் பின் சதுர்த்தி. மகம் மறுநாள் பின்னிரவு 03.41 மணி வரை அதன் பின் பூரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். திருமணம் சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொன்நகை சேர்க்கை ஏற்படும். குழந்தைகளால் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் சம்பவங்கள் நடைபெறும். ராசிநாதன் நான்காவது வீட்டில் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதார வரவு அபரிமிதமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். உறவினர்களால் உற்சாகம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவி கிடைக்கும். சகோதரர்களால் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டாகும். வழக்கு ரீதியாக வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் அடையலாம். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கடகம்
சந்திரன்
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும்.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் மறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வேலையில் மேலதிகாரிகளால் நன்மைகள் ஏற்படும். உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த கடன் தடையின்றி கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வருமானத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். மனநிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் நாளாகும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும். வருமானம் பெருகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.

விருச்சிகம்
சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வேலையில் சிலருக்கு இடமாற்றங்கள் தொடர்பான செய்திகள் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமும் கவனமும் அவசியம். வாகன பயணங்களைத் தவிர்த்து விடவும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் தேடி வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும் நாளாக அமையும்.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவு வரும். கடன் பிரச்சினை நீங்கும். இன்று உற்றார் உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்தி கிட்டும். வங்கி சேமிப்பு உயரும். வேலையில் எதிர்பாராத இட மாற்றங்கள் கிடைக்கும். ஆலய தரிசனம் செய்வதால் மன நிம்மதி ஏற்படும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *