Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஜூலை 12, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஜூலை 12, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 28 ஆம் தேதி ஜூலை 12,2021 திங்கட்க்கிழமை,துவிதியை திதி காலை 08.20 மணிவரை அதன் பின் திருதியை. ஆயில்யம் பின்னிரவு 03.14 மணி வரை அதன் பின் மகம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சந்திரபகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் நான்காம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உடன் இணைந்து சந்திர மங்கள யோகம் பெற்று பயணம் செய்கிறார். ஏற்கனவே சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து பிருகு மங்கல யோகம் கை கூடி வந்துள்ளது. இன்று இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். திடீர் பண வருமானம் வரும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நினைத்தது நிறைவேறும்.

ரிஷபம்
மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்துள்ளதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவும் சிந்தனையும் தெளிவும் பிறக்கும். இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு வேலைப்பளு குறையும் மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

மிதுனம்
இரண்டாம் வீட்டில் சந்திரன் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்துள்ளார். பண வருமானம் அதிகரிக்கும். இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களை சந்தித்து பேசுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் செவ்வாய், சுக்கிரன் உடன் பயணம் செய்கிறார். முகத்தில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள், சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும். நெருங்கியவர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். பண வரவு வரும் சுப செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். செவ்வாய், சுக்கிரன் இணைந்து பயணம் செய்வதால் உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபசெலவுகள் செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பாக்ய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் கூடியிருப்பதால் மனதில் நிம்மதியும் சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமை தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். உறவினர்களால் உற்சாகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மூன்று கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் முகத்தில் தெளிவு பிறக்கும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவு வரும். சொத்து வாங்க முயற்சி செய்யலாம். இன்று செய்யும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்வீர்கள். வெளி மாநிலத்தவர் நட்பு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *