அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: ரஜினிகாந்த்

Loading

ரஜினி மக்கள் மன்றங்கள் கலைப்பு
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சென்னை

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் , என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன ?என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது .அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.

காலச் சூழலால் நாம் எண்ணம் சாத்தியப்படவில்லை . வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார் பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள். இணை. துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் .மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த் ” என்று குறிப்பிட்டுள்ளார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *