Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 10, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஜூலை 10, 2021

சென்னை: பிலவ வருடம் ஆனி 26 ஆம் தேதி ஜூலை 10,2021 சனிக்கிழமை. அமாவாசை காலை 06.46 மணிவரை அதன் பின் பிரதமை. புனர்பூசம் இரவு 01.02 மணி வரை அதன் பின் பூசம். சந்திரன் இன்றைய தினம் மிதுனம், கடக ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் முடிந்து தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் கவனம் தேவை. சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணிக்கிறார். இன்றைய தினம் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்திக்கூர்மையால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும்.

ரிஷபம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணிக்கிறார் பணவரவு அதிகரிக்கும். வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த பண வரவு வரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பதவி அல்லது பொறுப்புகள் உயரும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பயணங்களால் சந்தோஷம் ஏற்படும்.

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலங்கள் ஏற்படும் என்றாலும் குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் வீண் விரயம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் செயல்படவும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள் வாங்கி வைத்த சரக்குகள் விற்றுத்தீரும். இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். திடீர் பண வரவு வரும் கூடவே செலவு வரும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவைப்படும் நாளாகும்.

கடகம்
சந்திரன் ராசிக்கு உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணிக்கிறார். விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் மூன்று கிரகங்களினால் திடீர் செலவு வரும். தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு திடீர் யோகம் வரும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சிம்மம்
சந்திரன் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார். மூன்று கிரகங்கள் லாப ஸ்தானத்தில் பயணிப்பதால் உற்சாகம் கூடும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை ஏற்படலாம். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றுவதன் மூலம் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்கள், வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

கன்னி
சந்திரன் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் உற்சாகம் கூடும். உடன்பிறப்புகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். திட்டமிட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்
சந்திரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அப்பா வழியில் பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணிபுரியும் இடத்தில் உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்வும். எதிர்பார்த்த பயணங்கள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த செயலையும் செய்யும் முன்பு சிந்தித்து செயல்படவும். சொத்து பிரிவினைகளில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். மாலை வரை பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்கள் இன்றைக்கு வேண்டாம். மாலைக்கு மேல் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

தனுசு
சந்திரன் களத்திர ஸ்தானத்தில் இன்றைய தினம் சஞ்சரிக்கிறார். வீட்டில் நிதானம் தேவை. பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுநலம் சம்பந்தமான செயல்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாலைக்கு மேல் சந்திரன் எட்டாம் வீட்டிற்கு வருவதால் கோபமாக பேசுவதைத் தவிர்க்கவும். உறவினர்களிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இரவு நேர பயணங்கள் வேண்டாம் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.

மகரம்
சந்திரன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உடல் நலத்தில் அக்கறை தேவை. திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமான பலனை தரும். திடீர் பணவரவு வரும் நிதி நெருக்கடிகள் நீங்கும். புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் திருப்தியான சூழல் அமையும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்துவிடுவீர்கள். மற்றவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும்.

கும்பம்
சந்திரன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தமான சுப முயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். சாமர்த்தியமான பேச்சுக்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

மீனம்
சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். பயணங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். குழந்தைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *