சென்னை பெருநகரில் வரும் 05-07-2021 முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

Loading

சென்னை பெருநகரில் வரும் 05-07-2021 முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின்
போது கொரோனா பரவலை தடுப்பதற்கு காவல்துறை மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து.
05-07-2021 முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின்போது கொரோனா
பரவலை தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன் தீப் சிங்பேடி, மற்றும் சென்னை
மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயராணி, இ.ஆ.ப இணைந்து வியாபார சங்க நிர்வாகிகளுடன்
கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க

அனைத்து வியாபாரிகளும், வர்த்தகர்களும் கீழ்கண்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, நொச்சிகுப்பம், காசிமேடு மற்றும் வானகரம் ஆகிய இடங்களில் உள்ள மீன்
மார்கெட்கள், கோயம்பேடு, பூக்கடை, கொத்தவால்சாவடி, ஜாம்பஜார், தி.நகர் போன்ற முக்கியமான
மார்கெட் பகுதிகள் மற்றும் வணிகவளாகங்களில் அதிகமாக மக்கள் கூடும்போது கொரோனா தொற்று
பரவ வாய்ப்புள்ளதால், நுழைவாயிலில் கூடாரங்கள் அமைத்து அங்கு வரும் பொதுமக்களின் உடல்
வெப்பம் சோதனை செய்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் மற்றும் முக கவசம்
அணிதலை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி இடங்களில் இரும்பு தடுப்புகள் மற்றும்
வட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்கள், மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ்
கடற்கரைகளின் நுழைவு மற்றும் வெளிவாயில்களில் கூடாரங்கள் அமைத்து அதில் வெப்பம் சோதனை
செய்யும் கருவி, கிருமி நாசினி மற்றும் முக கவசம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு
கோபுரம் அமைக்கப்பட்டும், மற்றும் பொது ஒலிபரப்பு கருவி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றுவது,
முககவசம் அணிவதன் அவசியம் குறித்த அறிவுப்புகள் அவ்வப்போது வழங்கப்பட்டு. பூங்காக்கள்,
கடற்கரைகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக
தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு அவர்கள் மக்கள் கூடும் இடங்களில்
சென்னை பெருநகர காவலர்களுடன் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு பணியில் செயல்பட உள்ளனர்.
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனாவை தடுக்க முக கவசம்! கை சுத்தம்! சமூக
இடைவெளி! தடுப்பூசி ! என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் (6×5 அடி) சென்னை
பெருநகர மாநகராட்சி, சென்னை பெருநகர காவல் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பாக
வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் 40 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்விடங்களில்
காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து
சுழற்சி முறையில் 2 பிரிவுகளாக ஆளிநர்கள் பணியமர்த்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மேற்கண்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக
பின்பற்றுமாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *