ரூ. 31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது

Loading

ரூ. 31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது

சென்னை, ஜூலை 03, 2021

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்ற விமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன் (27) என்பவர் தங்கம் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரிடம் நடைபெற்ற சோதனையில் 715 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பில் மொத்தம் 633 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரை கண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்த கடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சம் மதிப்பில் மொத்தம் 633 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *