பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர் . இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்றும் குறையாத நிலையில் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்று சத்து மாத்திரைகளை உண்ணவேண்டும். மேலும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து விடுபட அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது .மேலும் வேளாண்மை துறை சார்பில் பாலக்கோடு ஒன்றியத்தில் நடப்பாண்டில் பருவமழை மிகவும் குறைந்து உள்ளதால் நிலத்தடி நீர் மட்டும் போதிய அளவு இல்லாத சூழலில் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சொட்டுநீர் பாசனத்தை உபயோகிக்கவேண்டும் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவையான சலுகைகளை பெற்று விவசாயிகள் பயன் அடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சேர்மன் பாஞ்சாலை கோபால். துணைச் சேர்மன் பிரபாகரன்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன். ரவி மற்றும் ஒன்றியத்தில் உள்ள கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply