உளுந்தூர்பேட்டையில் சட்ட மன்ற அலுவலகம் திறப்பு
உளுந்தூர்பேட்டை ஜூலை 2
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணிகண்டன் அவர்கள் புதுப்பித்து திறந்து வைத்தார்,
திருநாவலூர் சட்டமன்ற தொகுதியாக இருந்த பொழுது திருநாவலூரில் சட்ட மன்ற அலுவலகம் ஒன்று கட்டப்பட்டது அந்த அலுவலகம் தற்பொழுது மாட்டுத் தொழுவம் ஆக மாறி உள்ளது, இந்நிலையில் திருநாவலூர் சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை சட்டமன்றம் தொகுதியாக மாறிய பொழுது உளுந்தூர்பேட்டையில் இருந்து வந்த சட்டமன்றம் அலுவலக கட்டிடம் பராமரிக்க படாமலேயே கடந்த 15 ஆண்டுகளாக பூட்டிய நிலையில் இருந்தது இந்த சட்டமன்ற அலுவலக கட்டிடத்தை தற்பொழுது உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜெ மணிகண்டன் அவர்கள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தை புதுப்பித்து திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் உதய சூரியன் திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணை நல்லூர் ஆகிய ஒன்றியங்களின் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏனையோர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தை பராமரித்து புதுப்பித்துத் திறந்ததுபோல்
திருநாவலூரில் சட்ட மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பராமரிக்க படாமலும், புதுப்பிக்க படாமலும் அக்கட்டிடம் மாட்டுத்தொழுவமாகவும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்ந்து வருகிறது எனவே திருநாவலூரில் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் சட்டமன்ற அலுவலகக் கட்டிடத்தை புதுப்பித்து வேறு அரசு பணிகளுக்கு ஒதுக்கி பயன்படுத்திட இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என ஏனையோர் கோரிக்கை விடுத்துள்ளனர்,