oday’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூன் 30, 2021
oday’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூன் 30, 2021 சென்னை:
பிலவ வருடம் ஆனி 16 ஆம் தேதி ஜூன் 30,2021 புதன்கிழமை. சஷ்டி திதி பகல் 01.19மணிவரை அதன் பின் சப்தமி திதி. பூரட்டாதி இரவு 02.03 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் இரவு 7 மணி வரை கும்ப ராசியிலும் 7 மணிக்கு மேல் மீன ராசியிலும் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு இரவுக்கு மேல் சிம்ம ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
லாப ஸ்தானத்தில் பயணிக்கும் சந்திரனால் மனதில் நிம்மதி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
ரிஷபம்
தொழில் ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்வதால் வியாபாரத்தில் வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
மிதுனம்
சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்திலும் சற்று மந்த நிலை, கை கால் அசதி ஏற்பட்டு நீங்கும். இன்று பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். தொலை தூர பயணங்கள், இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மன மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
விருச்சிகம் சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சனைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நண்பர்களால் நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
கும்பம் சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை நீங்கும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் நீங்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் நீங்கும்.