தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்
சென்னை : தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் 3 பேர் கொண்ட பட்டியல் அடிப்படையில், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் தற்போதுள்ள டிஜிபிக்களில் தகுதியுள்ள 7 பேர் பட்டியல் யூபிஎஸ்சி பார்வைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
யார் யார் 7 பேர் பட்டியல் பின்வருமாறு: 1. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, 2. மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, 3. தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, 4. சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், 5. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, 6. சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், 7. டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் ஆவர்.
இதில் யாரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்வது என்பது தொடர்பாக யூபிஎஸ்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் டெல்லி சென்றனர்.
தமிழக டிஜிபி இதில் சைலேந்திர பாபு, சஞ்சய் அரோரா, கரன் சின்ஹா ஆகியோர் பெயர் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டது இறுதிப் பட்டியலில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா இருவர் பெயர் மட்டும் இருந்தது. இந்நிலையில் தான் :தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்டாலின் விருப்பம் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நாளை மதியம் 12 மணிக்கு பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ரயில்வே டிஜிபியாக பதவி வகிக்கிறார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். தமிழகத்தில் அதிக விமர்சனங்களை சந்திக்காத நேர்மையான காவல் அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ். இவர் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் பல்வேறு விஷயங்களை தொடர்ந்து செய்து ஊக்கப்படுத்தி வருபவர் ஆவார். சட்டம் ஒழுங்கு துறையிலும் மிகுந்த அனுபவசாலி என்பதால் முதல்வர் ஸ்டாலின் இவரை டிஜிபியாக தேர்வு செய்துள்ளார்,.