மாரண்டஅள்ளியில் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
பாலக்கோடு.ஜுன்.28-
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பங்களா தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார் 37 வயது இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தம்பி சந்திரன் இவரும் கூலி வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு அப்பா அம்மா இல்லை. சிவக்குமார் தம்பி சந்திரன் இருவரும் மட்டும் வசித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகவில்லை நேற்று இரவு சிவகுமார் குடித்துவிட்டு தூங்குவதற்காக வீட்டின் மாடி மேல் சென்று உள்ளார் நேற்று நள்ளிரவில் திடீரென்று மழை வந்ததால் மாடியிலிருந்து கீழே இறங்கி உள்ளார். சிவகுமாருக்கு மாலைக்கண் நோய் என்பதால் மழை சாரலில் தெளிவாக கண்பார்வை தெரியாததால் இரவு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். காலையில் தம்பி சந்திரன் பார்க்கையில் அண்ணன் கீழே விழுந்தது இருப்பதை கண்டு மாரண்டஅள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் மாரண்டஅள்ளி போலீசார் கீழே விழுந்த சிவக்குமார் உடலே ஆய்வு செய்ததில் சிவகுமாருக்கு தலை மற்றும் நெற்றிப் பகுதியில் ரத்தம் வழிந்திருந்தது தெரியவந்தது சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.