பட்டா மாற்றம் செய்வதற்கு 2000 ம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.

Loading

பாலக்கோடு.ஜுன்.28-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மூர்த்தி ( 24) , இவர் அப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூன்றரை சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.இந்த நிலத்தை பட்டா மாற்றம் செய்ய வேண்டி ஜெர்தலாவ் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார்.ஜெர்தலாவ் கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால், பி.செட்டிஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் (பொ) செல்வம் ( 53) . கூடுதலாக கவனித்து வந்தார். மூர்த்தி பட்டா மாற்றம் குறித்து வி.ஏ.ஓ விடம் கேட்கும் போது ரூ.3000 இலஞ்சம் கொடுத்தால், பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, சரி ,ரூபாய் 2500 கொடு என்று கேட்டுள்ளார்.இதனால் முதல் கட்டமாக ரூபாய் 500 ஐ,மூர்த்தி கொடுத்துள்ளார்.பின்பு, லஞ்சம் கொடுக்க மனம் வராததால் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
புகாரின்பேரில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்று ரசாயன பவுடர் தடவிய 2000 ரூபாயை மூர்த்தியிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் கொடுக்க செய்தனர்.
அதை போல இன்று பிற்பகல் கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் 2000 ரூபாய் பணத்தை கொடுக்கும் போது மறைந்து இருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *