தூய்மை திருவள்ளுர் திட்டத்தின் குப்பைகளை அள்ளும் வாகனங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்
![]()
திருவள்ளூர் ஜூன் 28 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தூய்மை திருவள்ளுர் திட்டத்தினை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, குப்பைகளை அள்ளும் வாகனங்களை வழியனுப்பி வைத்தனர்.திருவள்ளுர் தனியார் திருமண மண்டபத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்து, கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.அப்பொழுது அமைச்சர் பேசியதாவது :

சாலை ஒரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் பெருந்திரளாக தூய்மை திருவள்ளுர் வாரமாக 28.06.2021 முதல் 04.07.2021 வரை சாலை ஓரங்களில் குப்பைகளை பாதுகாப்பாக அகற்றும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக 17 ஜெ.சி.பி இயந்திரம், 58 டிராக்டர்கள், 534 பணியாளர்களைக் கொண்டு குப்பைகளை பாதுகாப்பாக அகற்றவும், 526 ஊராட்சிகளில் 2165 தூய்மை பணியாளர்களைக் கொண்டு வீடுகள் தோறும் குப்பைகளை சேகரித்தல், குப்பைத்தொட்டிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துதல் மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், நரிகுறவர் வயது முதிர்ந்தோர், செங்கல்சூளையில் பணிபுரியும் நபர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் முகாம் அமைத்து, கோவிட் தடுப்பூசி வழங்கும் நடைமுறை நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் உள்ள 426 திருநங்கைகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கி வைக்கப்பட்டது. மேலும், ரூ.1500 மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ட்டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, திருவள்ளுர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி..உமா மகேஸ்வரி, குடும்ப நலம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் ராணி, மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் தேசிங்கு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
