திருவண்ணாமலை நகராட்சி உருவாக்கப்பட்டு தற்போது 135 ஆண்டு பழமையான நகரமாக திகழ்கிறது பொதுப்பணித்துறை அமைச்சர் பேட்டி.

Loading

திருவண்ணாமலை. ஜூன். 28.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளர்ச்சி குறித்தான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலு. தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர்,கு, பிச்சாண்டி ,மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் சி, என், அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கம் ,மு,பெ, கிரி, வந்தவாசி, அம்பேத் குமார் ,கலசபாக்கம் சரவணன், செய்யார் ஜோதி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி.
கூடுதல் ஆட்சியர்மற்றும் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பிரதாப். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட வன அலுவலர் அருண்லால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சந்திரா, வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயகுமார், உதவி ஆட்சியர் பயிற்சி கட்டாரவி தேஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள், மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்., பின்னர் அமைச்சர் கூறியதாவது. திருவண்ணாமலை நகரத்திற்கு பல பெருமைகள் உள்ளது. காப்பியத்தில் 2000 ஆண்டுகள் கி,மு ,முதல் நூற்றாண்டில் மதுரை நகரம் முன்பு திருவண்ணாமலை தோன்றியதாக உள்ளது, ஆங்கிலேயர் காலத்தில் திருவண்ணாமலை நகராட்சி உருவாக்கப்பட்டு தற்போது 135 ஆண்டுகள் பழமையான நகரமாக திகழ்கிறது, ஒரு காலத்தில் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகராக சித்தூர், தென் ஆர்க்காடு தலைநகராக கடலூர், இருந்தபோது தென் ஆற்காடு பகுதியில் திருவண்ணாமலை நகராட்சி இருந்துள்ளது என்றார் . மேலும் இக்கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்கான. கோரிக்கைகளை தெரிவித்தனர். மேலும். திருவண்ணாமலை நகரம் மட்டும் வேங்கிக்கால் பகுதிகளில் பல்வேறு தொற்று வியாதி பாதிப்பு ஏற்படுத்தி வரும். ஈசானிய குப்பை பகுதியை நகரத்தின் வெளியில் அமைக்க வேண்டும். உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *