லஞ்சம் வாங்கிக் கொண்டு பட்டா மாற்றம் செய்து தந்த கிராம அலுவலர் மற்றும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் , மாவட்ட கலெக்டர் முருகேஷை சந்தித்து கொடுத்துள்ளபுகார் மனுவில் கூறப்பட்டுஇருப்பதாவது:-
எங்களுடைய தாத்தா வேலாயுதம் வாங்கிய
ரூ.14 கோடி மதிப்பிலானநிலம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவில் அருகில் உள்ளது. அதனை உயில் அடிப்படையில் வாரிசுதாரர்கள் கூட்டுக்குடும்பமாக இருந்து அனுபவித்துவருகிறோம்.
இந்நிலையில் பக்கத்து நிலத்தை சேர்ந்த நபர் ,போலிஆவணங்களை கொடுத்து அவரது வாரிசுதாரர்களை எங்கள் நிலத்தின்வாரிசுதாரர்கள் என்று , வேங்கிக்கால் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உதவியுடன் கடந்த 24 6 2021அன்று பட்டா மாறுதல் செய்துள்ளனர். இதற்காக பல லட்சம் லட்சம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தாங்கள்உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது தொடர்பாக அதிகாரிகள் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்படும் என்று உறுதியளித்தார் .
திருவண்ணாமலையில்
ரூ.14கோடிமதிப்பிலானநிலமோசடிபுகார் எழுந்துள்ளது பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது