சென்னையில் கடந்த அதிமுக ஆட்சி கழிவு நீர் வடிகாலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டதற்கான ஒரு வீடியோ சாட்சி ஆதாரம் கூட கிடையாது என எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்

Loading

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 10 நாட்களில் சென்னை முழுவதும் மழை காலங்களில் அதிக மழை நீர் தேங்க கூடிய பகுதிகளான 801 தெருக்களை தேர்வு செய்து கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வாரும் பணியை அதிக திறன் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தி – பணியாளர்களோடு தீவிரமான பணியை மேற்கொண்டுவருகிறது குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்.

இதன்படி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் கொடியசைத்து துவங்கி வைத்தார் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் :

மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமலிருக்க உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கால்வாய்களை தூர்வார உத்தரவிட்டுள்ளார் என்றார்.

கழிவுநீர் தங்கு தடையின்றி செல்வதற்கான வழி வகைகளை இந்த திட்டம் மூலம் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் வரும் மழை பருவ காலத்தில் மழை நீர் தேங்குவதை தடுக்க முடியும் என்றார்.

கடந்த ஆட்சியில் கழிவு நீர் வடிகாலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டதற்கான ஒரு வீடியோ சாட்ச்சி ஆதாரம் கூட கிடையாது.கடந்த அதிமுக அரசு பேரிடர் மேலாண்மை பணியில் பெயரளவில் மட்டுமே செயல்பட்டுள்ளது என்றார்.

0Shares

Leave a Reply