காங்கிரஸ் எம்.எல்.ஏ., அரிசி பைகள் வழங்கினார்

Loading

ஈரோடு ஜூன் 23
ஈரோடு காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஏழை மக்களுக்கு அரிசிப் பைகளை எம்.எல்.ஏ., வழங்கினார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் எம் எல் ஏ .திருமகன் ஈவெரா “கொரோனா” பெருந்தொற்று காரணமாக பொது முடக்கத்தால் பாதிக்கப் பட்ட ஏழை எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்கிற வேண்டுகோளுக்கிணங்க
ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் இன்று 11 வது நாளாக ஈரோடு சென்னிமலை சாலையில்,இரயில்வே டீசல் செட் எதிரே உள்ள விவேகானந்தர் நகரில் மூன்றாம் மண்டல தலைவர் டி.திருசெல்வம் தலைமையில் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா இரண்டாம் மண்டல தலைவர் ஆர் விஜயபாஸ்கர், சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் ஜவஹர் அலி சிறுபான்மை துறை நான்காம் மண்டல தலைவர் சூர்யா சித்திக் முன்னிலையில் *”ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ.சுரேஷ் 150 குடும்பங்களுக்கு தரமான அரிசி பைகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பி்.ஏ.பெரியசாமி ஈரோடு மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் களான டி.கண்ணப்பன்,எம் ஆர் அரவிந்தராஜ், கராத்தே யூசுப், ஏ.வின்சென்ட் மாவட்ட செயலாளர்களான கே.ஜே.டிட்டோ,சிவா என்கிற சிவக்குமார், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து, மாவட்ட சேவா தள தலைவர் பி ஆறுமுகம், மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் கேபி சின்னசாமி,மாநில எஸ்சி பிரிவு துணைத்தலைவர் குளம் எம் ராஜேந்திரன், சிறுபான்மை துறை மூத்த நிர்வாகி ஈ.எம் சிராஜ்தீன்,ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கார்த்திக் 45 வார்டு தலைவர் இப்ராஹிம்,கறிக்கடை யூசுப், காஜா மைதீன், ஷாகிதா பானு, ஆதிலா பாத்திமா, அனீஸ் பாத்திமா,ரசீதா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply