Today’s Rasi Palan:இன்றைய ராசி பலன் – செவ்வாய்க்கிழமை ஜூன் 22, 2021

Loading

Today’s Rasi Palan:இன்றைய ராசி பலன் – செவ்வாய்க்கிழமை ஜூன் 22, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 8 ஆம் தேதி ஜூன் 22,2021 செவ்வாய்க்கிழமை. துவாதசி திதி பகல் 10.22 மணிவரை அதன் பின் திரயோதசி திதி. விசாகம் பகல் 02.22 மணிவரை அதன் பின் அனுசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விடவும். ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நிதி நெருக்கடி நீங்கும் வங்கி சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். வியாபாரம் செய்வோர் பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன் பிரச்சினை குறையும். பெரிய மனிதர்களின் ஆசி கிடைக்கும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நெருங்கிய உறவினர்களின் உதவியால் பிரச்சினை தீரும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி தேடி வரும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். திடீர் பயண வரவு வரும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். குடும்பத்தில் சுப விரைய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. பொறுப்புகளை தட்டிக்கழிக்க வேண்டாம். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். முடிந்த வரை பணவிஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *