காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி சாலையில் கார் மோதி பெண் ஒருவர் பலி
காளையார்கோவில் – பரமக்குடி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் ஆர்எஸ் மங்கலத்தைச் சேர்ந்த அருணா தேவி வயது (28) சிவகங்கை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் தன்னுடைய அலுவலக பணிக்காக தன்னுடைய சொந்த ஊரான ஆர்எஸ் மங்கலத்தில் இருந்து சிவகங்கை செல்வதற்காக காளையார் கோவில் வழியாக செல்லும்போது காளையார்கோவில் – பரமக்குடி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதுகுறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் பிரேத பரிசோதனைக்காக அருணா தேவியின் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது