திருவள்ளூரில் அரசு சேமிப்பு கிடங்கில் கொரோனா நிவாரண மளிகைப் பொருட்கள் விநியோகித்தல் மற்றும் நியாயவிலைக் கடையை கலெக்டர் திடீர் ஆய்வு
திருவள்ளூர் ஜூன் 20 : திருவள்ளுர் நகராட்சி, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில், நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக வழங்கப்படும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்களை நியாய விலைக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படுவது தொடர்பாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விநியோகிப்பு முறை குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மா.பொ.சி. சாலையில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கள் விநியோகிப்பது தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் பொதுமக்களுக்கு ரொக்கம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.ஜெயஸ்ரீ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் காஜா சாகுல் ஹமீது, ஆவடி வட்டாட்சியர் செல்வம், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.