உலக ஆரிய வைசிய மகா சபா சார்பில் அதன் தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, சூளைமேடு, திருவள்ளுவர் புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
உலக ஆரிய வைசிய மகா சபா சார்பில் அதன் தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, சூளைமேடு, திருவள்ளுவர் புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.திரு.எழிலன் நாகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தலைவர் ஆ.ஹென்றி அவர்களும்,
அனைத்திந்திய பத்திரிக்கை மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் நிறுவனர்-தலைவர், செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர், திரு.ராஜேந்திரன் அவர்களும், உலக ஆரிய வைசிய மகா சபா ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ரங்கநாயகளு, திரு.ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகளும், திமுக பிரமுகர்கள் திரு.வி.எஸ்.ராஜ், திரு.டேவிட் இன்பராஜ் உள்ளிட்ட பிரமுகர்களும் FAIRA தலைமை நிலையச் செயலாளர் திரு ஆர்.கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் 300 பேர் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசியைப் போட்டுச் சென்றனர்.