திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு

Loading

திருவள்ளூர் ஜூன் 19 : திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு மேற்கொள்ள வருகை புரிந்தார். அவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி‌ ஜான் வர்க்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள 16 நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோரிடம் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது நீதிமன்ற பணிகளுக்காக தபால் நிலையம், வங்கி கிளை இல்லாததால் நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளதால் நீதமன்ற வளாகத்திற்குள் அமைக்க வேண்டும் னஎ்றும், நீதிமன்ற ஊழிய்ர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு கேன்டீன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்றும் பராமரிக்கப்படாமல் உள்ள கழிவறையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தீர்ப்பு வழங்கும் போது யோசித்து வழங்க வேண்டும் என்றும், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வரும்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொளள வேண்டும் என சென்நை உயர்நீதிமன்ற நீதிபதி வலுயுறுத்தியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மரக்கன்று ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நாட்டார்.இதில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி,செயலாளர் பால்ராஜ்,மூவண்ணன்,வாக்கறிஞர் சங்க நிர்வாகிகள் டி.சீனிவாசன், இளவரசு,கணேசன், நளினிக்குமார்,அரசுத்தரப்பு வழக்கறிஞர் ராம்குமார்,மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply