மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரயிலில் அடிபட்டு இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் உயிரிழந்தார்.

Loading

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சுரேஷ்(35) இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தற்போது மானாமதுரை பாண்டியன் நகரில் வசித்து வருகிறார்.

மானாமதுரை பஸ் நிலையம் அருகேயுள்ள இரு சக்கர வாகனம் விற்கும் ஷோரூமில் சுரேஷ் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

இரவு பஸ் நிலையம் எதிரே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுரேஷ் மீது அந்த வழியாக வந்த சிறப்பு ரயில் மோதி உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply