காட்பாடிஅரசுமகளிர்மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
வேலூர் ஜூன் 18
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்ட நிர்வாகமும், வேலூர் மாநகராட்சியும், காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கமும், வேலூர் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் இணைந்து 5வது முறையாக கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 9.30 மணியளவில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு காட்பாடிரெட்கிராஸ்அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, தடுப்பூசி செலுத்தும் முகாமினை துவக்கிவைத்தார். உதவித்தலைமையாசிரியை டி.என்.ஷோபா, காட்பாடி லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் என்.பிரகாஷ், மேலாண்மைக்குழு உறுப்பினர் வி.காந்திலால் படேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையைத்தின் மருத்துவ அலுவலர் வெங்கடலட்சுமி, மருத்துவர் சிவரஞ்சனி ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் என்.ஜெயலட்சுமி, என்.சசிகலா, ஆர்.பிரியங்கா, எல்.ஹேமலதா, ஜான்சி, கல்யாணி உள்ளிட்டோர் தடுப்பூசிகளை செலுத்தினர். தடுப்பூசி செலுத்திய விவரங்களை சுகாதார நிலையத்தின் கனினி தொழில்நுட்ப வல்லுநர் கல்பனா மேற்கொண்டார்.* இந்த நிகழ்வில்
வேலூர் மாநகராட்சியின் மாநகர்நல அலுவலர் டாக்டர்.சித்ரசேனா, முதல் மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார், முதல் மண்டல சுகாதார அலுவலர் பி.பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டு வழிகாட்டினர். இம் முகாமில் 500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டன