திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜூன் 17 : கொரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகரப் பகுதி, வட்ட, கிளை பொறுப்பாளர்கள், அனைத்து அணிகள், துணை பொறுப்பாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டின் முன்னாள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அறிவித்தார்.
அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலா என்கிற பாலயோகி தலைமையில் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பாக கொரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும்,மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் பதாகைகளை ஏந்தி மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும்,மதுக்கடைகளை நிரந்தரமாக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாநில அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன்,மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், தீனதயாளன்,கண்ணன்,பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் தலைமையிலும்,ஆவடியில் மாநில துணை அமைப்பு செயலாளர் ந.அனந்தகிருஷ்ணன் தலைமையிலும்,மாதவ்ராத்தில் மாவட்ட செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமையிலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும்,மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.