திண்டுக்கல் மாவட்டம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை

Loading

திண்டுக்கல் மாவட்டம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.விசாகன் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.விசாகன் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்திட அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது . திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் ,

மாவட்டத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுத்திட பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . அதன்படி , பொது மக்கள் வெளியே செல்லும்போது பொது இடங்களிலும் , கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் . பொதுமக்கள் வீட்டிலும் , பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கழுவியும் , இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும் , அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும் , முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் , இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் . தமிழக அரசால் பல்வேறு தளர்வுகளுக்கு தனிதனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும் . கை சமூக திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று கண்டறியப்பட்ட ஒரே பகுதிகளில் மூன்று வீடுகளுக்கு மேல் இருந்தால் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக ( Containment Zone ) அறிவித்து எந்தவிதமான தளர்வுகளுமின்றி அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வராத வகையில் காவல்துறை உள்ளாட்சி அமைப்புகள் , வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பட வேண்டும் . மேலும் , அப்பகுதியில் RTPCR சோதனைகளை அதிகப்படுத்தவும் தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்த வேண்டும் . மேலும் , காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும் , வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல் , சளி , இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும் , நோய்த் தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . அரசு தமிழக கொரோனா தொற்று நோய் சிகிச்சை மேற்கொள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் , தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் , திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் RTPCR சோதனைகளை அதிகப்படுத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன் , இ.ஆ.ப . , அவர்கள் தெரிவித்தார் . மாவட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராசு , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் ச.தினேஷ்குமார்.துணை இயக்குநர் ( மருத்துவம் ) , இணை இயக்குநர் ( மருத்துவம் ) , ஊராட்சித்துறை மற்றும் பேரூராட்சித்துறை உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . செய்தி வெளியீடு : – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் , திண்டுக்கல் ,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *