காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜன் தலைமை வகித்தார் மற்றும் ஆணையர் பாஸ்கரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
உறுப்பினர் பாண்டியராஜன் பேசுகையில்: நியாய விலை கடை எண் 1 தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் அதற்கு அரசு புதிதாக ஒரு கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று கூறினார்
மற்றும் தெப்பக்குளத்தில் மேல் கரையில் இருக்கும் போர்வெல் மோட்டார் மக்களுக்கு பயன்படாமல் இருப்பதால் அதனை மக்களுக்கு பயன்படும் விதமாக மாற்றி தர வேண்டும் என்று கூறினார்
ஆணையர் பாஸ்கரன் கூறுகையில்: நியாயவிலை கடையை புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் தெப்பக் குளத்தில் இருக்கும் போர்வெல் மோட்டார் மக்களுக்கு பயன்படும் விதமாக போர்வெல் மோட்டார் மாற்றித் தரப்படும் என்றும் கூறினார்
இந்த கவுன்சிலர் கூட்டத்தில் அனைத்து துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்