சென்னை- ஜூன் 15, ஆலந்தூரில் நியாயவிலைக் கடையில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
சென்னை- ஜூன் 15, ஆலந்தூரில் நியாயவிலைக் கடையில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த கொரோனா நிவாரணநிதி நான்காயிரம் வழங்கப்படும் என்று ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளில் கையெழுத்திட்டார் அதனைத் தொடர்ந்து மே மாதம் முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணையாக ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாம் கட்ட நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். பொதுமக்கள் அனைவருக்கும் மே மாதம் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அனைவரின் இல்லங்களுக்கு டோக்கன் வினியோகித்து மே 15 ஆம் தேதி முதல் இரண்டாம் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று ஆலந்தூரில் உள்ள முத்தம்ஜி தெருவில் அமைந்துள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.