போக்குவரத்து ஆய்வாளர் நாகன் அவர்களின் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
சென்னை: கே.கே.நகர் போக்குவரத்து காவல் துறைக்குட்பட்ட காசி திரையரங்கு சிக்னல் எம். ஜி. ஆர். நகர் மார்க்கெட் மற்றும் உதயம் திரையரங்கு சந்திப்பில் போக்குவரத்து ஆய்வாளர் நாகன் அவர்களின் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ் விழிப்புணர்வின் பொழுது தனிமனித இடைவெளி கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்துதல் முகக் கவசம் இன்றி மற்றவரிடம் உரையாடுதல் தவிர்த்தல் கூட்டம் சேராமல், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களை தவிர்த்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.குறிப்பாக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.