தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை வரைமுறைப்படுத்த வேண்டும்

Loading

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் அவர்களுக்கு அன்பு அறக்கட்டளை நிறுவனர் அன்பு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியில் அன்பு அறக்கட்டளையின் நிறுவனர் அன்பு அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது… இதில் அவர் கூறுகையில்
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பெருகிவரும் இச்சமயத்தில் பொருளாதாரத்தை இழந்து மக்கள் சிரமப்படும் நிலையில் , புதுச்சேரி , அரியாங்குப்பம் அன்பு அறக்கட்டளை சார்பாக , அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுயிலுள்ள சுமார் 18,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ தமலை இலவச அரிசி , முகக்கவசம் , சானிடைசர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அன்பு அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் அன்பு ( எ ) அன்பரசு அவர்களால் வழங்கப்பட்டது .

மேலும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள , முகக்கவசம் அணிவது , சானிடைசர் பயன்படுத்துவது , கைகளை நன்கு கழுவுவது , ஒருவருக்கொருவர் குறைந்தது மூன்று அடி இடைவெளியில் இருக்கவேண்டியது மற்றும் கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவைகைள பரப்புரை செய்யப்பட்டது . இதற்கு முன்னர் சுமார் 6 வருடங்காளாக தானே புயல் நிவாரணம் , மழை நிவாரணங்கள் , மருத்துவ முகாம்கள் , இரத்ததான முகாம்கள் போன்ற மக்கள் பனிகள் அறக்கட்டடை மூலமாக செய்ப்பட்டு வருகிறது .
மேலும் தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று காரணமாக வேலையில்லாமலும்
மாணவர்களின் பெற்றோர்களுக்கு முறையான வருமானம் இல்லாத நிலையில் , ஆன்லைனில் வகுப்பு நடத்துவதற்காக ஆண்டிராய்டு செல் போன் வாங்க நிர்பந்திக்கப்படுகின்றனர் . மாணவர்களிடம் 70 % சதவீத கல்வி கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தபோதும் 100 % சதவீத கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது . பள்ளிகள் இயங்காத நிலையில் போருந்து கட்டணமும் வசூலிக்கப்படுகிறது . பெற்றோர்கள் 50 % சதவீத கல்விக் கட்டணத்தையே செலுத்த சிரமப்பட்டுவரும் நிலையில் மிகுந்த வேதனையில் உள்ளனர் . எனவே , மாணவப் பெற்றோர்களின் நலன் காத்திட, முதல்வர் அவர்கள் தலையிட்டு பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை வரைமுறை படுத்தவேண்டும் என்று அன்பு அறக்கட்டளை நிறுவனர் அன்பு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது… தலைவர் வீரப்பன், பொருளாளர் நிர்மலாதேவி, செயலாளர் முத்து, துணைத்தலைவர் வாழ்முனி, ஜீவா, முருகன் மற்றும் துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *