30 நாட்களில் முதலமைச்சரின் முன்மாதிரியான சாதனை
![]()

30 நாட்களில் முதலமைச்சரின் முன்மாதிரியான சாதனை
அரசியல் வேள்வியில்
அனைத்து கட்சி ஆதரவு
பெற்றாய்!
ஆட்சி பொறுப்பேற்ற
30 நாட்களில் முன்மாதிரி
ஆட்சி தந்தாய்!
இல்லத்தரசிகளுக்கு
மாநகரங்களில் இலவசப்
பயணம் தந்தாய்!
வருவாய் ஈட்டவும், ஈட்ட
வகுத்தலுக்கும் நல்
அமைச்சர்களைத் தந்தாய்!
உழைப்பு, உழைப்பு
உழைப்பின் இலக்கணமாய்
வெற்றி பெற்றாய்!
ஊடகத்தாரை
முன்களப்பணியாளராய்
அங்கிகரித்தாய்!
எதிரணியினர்
வாழ்த்திட
களப்பணி கண்டாய்!
ஏழைகளின் துயரம்
உணர்ந்து ஊரடங்கில்
மென்மை கண்டாய்!
ஐயம் நீக்கிட கொரோனா
சுய தடுப்பூசி உற்பத்தி
திட்டம் தந்தாய்!
ஒற்றை மாதத்தில், ஒன்றிய
அரசிடம் மாநில
உரிமைகளை நிலை நாட்டினீர்!
ஓங்கட்டும் ஓங்கட்டும் நும்
வள்ளண்மை! தமிழ் வழி
ஔடதம் தந்து தமிழக மக்களைக் காக்கும்
மகத்தான மாண்புமிகு தளபதியாம்
தமிழக முதலமைச்சர் அவர்களின்
சாதனை பட்டியல் நீளட்டும்! நீளட்டும்!!
நம் பாரத தேசம் போல்!!!
கவிஞர் கடலூர் கோபாலபுரம்
செ. பீட்டர்அந்தோணிசாமி
தலைவர் & தமிழ் நாடு தலைமைச் செயலகச் சங்கம், சென்னை
